Paradesi Audio Launch invitation images (7)“எரியும் பனிக்காடு” நாவலை பாலா படமாக எடுக்கிறார் என்ற செய்தி வெளியான உடன், “அவர் படம் பண்ணறதுக்கு ஏத்த கதை களம் இது“ என்று பலரும் கருத்து தெரிவித்தனர். காலனிய முதலாளிகளின் லாபவெறிக்காக தமிழக அடித்தள மக்கள் அனுபவித்த ரணங்களை, வலிகளை உள்ளபடியே முன்வைத்த கதை அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளைகாரர்கள் உருவாக்கிய தேயிலை தோட்டங்களுக்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து பிழைப்பிற்காக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், அடிமைகளாக்கப்பட்டு சந்தித்த கொடுமைகளை இரத்தமும் சதையுமாக பதிவுசெய்த நாவல்தான் “எரியும் பனிக்காடு”. ஆங்கிலத்தில் “ரெட் டீ” என்ற தலைப்பில் வந்த நாவலின் தமிழாக்கம். அந்த நாவலை அடியொற்றியே “பரதேசி” படம் எடுக்கப்பட்டுள்ளது.

பரதேசியை பற்றி சில வரிகள்
பாலா படம் என்றாலே பொது சமூகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கதைகளம், அசாதாரண மனிதர்கள், இயல்பை மீறிய இருக்கமான பாத்திரபடைப்பு, கொடூரமான மரணம், அவலச்சுவையோடு இறுதிக்காட்சிகள் என்பதுதான் பொதுவான சூத்திரமாக இருந்துவந்துள்ளது. இந்த சூத்திரத்திற்கு “எரியும் பனிக்காடு“ ஒரு சிறந்த தேர்வு என்றுதான் நினைத்தேன். நினைத்தபடியே இக்கதை களத்தை பாலா மிகலாவகமாக பயன்படுத்தியுள்ளார் எனலாம். பாலாவின் படங்களில் சேது, நந்தாவிற்கு அடுத்து இயல்பான மனிதர்கள் கதாபாத்திரமாக இருப்பது “பரதேசி”யில்தான். என்னை பொறுத்தவரை சேதுவிற்கு பிறகு பரதேசிதான் பாலாவின் சிறந்த படைப்பு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

mass posterபடத்தின் கதைகளம் 1930 களில் நடைபெறுகிறது. தென்தமிழகத்தின் ஒரு வரண்ட பூமியில் உள்ள மனிதர்களின் எளிய வாழ்க்கை முறையினை, பழக்கவழக்கங்களை, சர்ச்சைகளை, நக்கல்-நையாண்டிகளை வெளிப்படுத்தியவாரே முதல் பாதிபடம் நகர்கிறது. உருப்படியான தொழில் ஏதுமில்லாத சூழலில், “தங்க இடம், சாப்பாடு, ஞாயிற்று கிழமை விடுப்பு, ஒரு வருசம் வேலை முடிஞ்ச கைநிறைய கூலியோட ஊரு திரும்பலாம்“ என்ற கங்காணியின் ஆசை வார்தைகளுக்கு மயங்கி பஞ்சம் பிழைக்க ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் மலைகாடுகளுக்கு வேலைக்கு போகிறார்கள் (சில பெண்களும் கூட). இப்படி வேலைக்கு போனவர்கள் தேயிலை தோட்டங்களில் அடிமைகளாகப்பட்டு, கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். உழைக்கும் உழைப்பின் பலன் அங்கு உண்பதற்கு, மருத்துவத்திற்குமே போக, கங்காணியிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் அங்கே வதைபடுகின்றனர் தொழிலாளர்கள். கங்காணியின் சதிவலையில் இருந்து மீள அவர்களால் இயலாமல் போகிறது. கடுமையான வேலை, கங்காணியின் உழைப்பு சுரண்டல் என ஒரு பக்கம் மக்கள் அவதியுற, அட்டை பூச்சிகளும், கடும் குளிரும், கொள்ளை நோய்களும் மக்களை இன்னொருபுறம் வாட்டுகிறது. வேலைக்கு வந்த இளம் பெண்கள் வெள்ளைகார துரைமார்களால் பாலியல் துன்புறுத்தளுக்கு உள்ளாவது மற்றொரு கொடுமை. இவர்கள் சிந்திய இரத்தமும், வாங்கிய அடியும், பட்ட வேதனைகளை இன்றைய தலைமுறையினரை உணருவைப்பதுதான் படித்தின் பதிவு.

??????????????????????????????????????????? பஞ்சம்பிழைக்க மலைகாடுகளுக்கு செல்பவர்களில் ஒருவனாக அதர்வா (ஒட்டுபொறுக்கியாக) சிறப்பாக நடித்துள்ளார். ஒட்டுபொறுக்கியின் தொழில் கிராமத்தில் கொட்டடிப்பது. இப்படியொரு பாத்திரத்தை நாயகனாக வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அவரது காதலியாக வேதிகாவின் (அங்கம்மா) நடிப்பும் சிறப்பு, இருந்தாலும் அவரது நிறம் மண்ணோடு ஒட்டவில்லை. இளம் திருமண ஜோடியாக வரும் இருவரின் நடிப்பும் சிறப்பு. குறிப்பாக இளம் பெண்ணின் நடிப்பு அற்புதம். வெள்ளைக்காரணால் சீண்டப்பட்டு கதறும் காட்சியிலும், பயப்படும் காட்சியிலும் பார்வையாளர்களை பதறவைக்கிறார். அதேபோல் தோட்டத்தொழிலாளியாக வரும் தன்ஷிகவின் நடிப்பும் அற்புதம், பொதுவாக கிளாமர் பொம்மைகளாக நடிக்கவே விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிப்பது பெரியகாரியம் என்றே நினைக்கிறேன். மேலும் படத்தில் வரும் எந்த பாத்திரத்தின் நடிப்பையும் குறைசொல்வதற்கில்லை. அதர்வாவின் பெரியப்பாவாக நடித்துள்ள எழுத்தாளர் விக்கிரமாதித்யன் முதல், வயதானவர்களாக வரும் பலரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக அதர்வாவின் பாட்டியாக வரும் கிழவியின் நடிப்பு மிக இயல்பு.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொன்று பாடல்கள், அனைத்து பாடல்களும் படத்தின் கதை களத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. படத்தில் சொல்லவந்த கருத்தை மிக அழுத்தமாக மனதில் பதியவைக்கிறது. வியாபாரத்திற்காக வழிந்து கொண்டு செயற்கையாக சில படல்களை உள்ளேவைக்காமல் இருந்தது பாராட்டிற்குறியது. குறிப்பாக செந்நீர்தானா, செங்காடே பாடல் வரிகள் மிக மிக அருமை, வரிகளை மெறுகேற்றும் அளவிற்கு இசையும் துணைசெய்துள்ளது. தன்னைத்தானே பாடலில் கானா பாலா பட்டையை கிளப்பியுள்ளார். பாடல்வரிகளுக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டுள்ளது கூட பாடல்களின் சிறப்பிற்கு காரணமாக இருக்கலாம். படத்தில் பாடல்களுக்கு அளிக்கப்பட்ட அளவிற்கு முக்கியத்துவைத்தை, கவனத்தை பின்னனி இசையில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாலா செய்யவில்லை என்றே நினைக்கிறேன். பின்னனி இசையில் உள்ள குறைபாட்டை உணரும்போதுதான், இளையராஜா நினைக்கு வருகிறார்.

இப்படத்திற்கு நாஞ்சில் நாடன் வசனம் எழுதியுள்ளார், சிறந்த கதையாசிரியர்கள் வசனம் எழுதும் போது தங்கள் இருப்பை வெளிப்படுத்த சில வார்த்தை ஜாலங்களை செய்வார்கள், ஆனால் நாஞ்சில் நாடன் அவ்வாரு இல்லாமல் கதையின் இயல்பு கேடாமல் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

eriyum-panikaadu-800x1200முந்திய படங்களில் ஜெயமோகனோடு இணைந்த பாலா, இந்துத்துவ பூவோடு சேர்ந்த நாராக மணந்தார். அது நம்மில் பலருக்கு குமட்டலையும், அருவருப்பை ஏற்படுத்தியது. இப்போது கூட்டணி மாறியது நல்லது என்றாலும், இன்னும் இந்துத்துவ வாசம் பாலாவிடம் குறையவில்லை என்பதை இப்படத்திலும் சில காட்சிகள் உணர்த்துகின்றது. அடிமையாக்கப்பட்ட தேயிலைதோட்டத் தொழிலாளர்களை சுரண்டு நபர்களில் ஒரு இந்து பூசாரி, ஒரு முஸ்லீம் வியாபாரி, ஒரு கிருத்துவ மருத்துவர் என அனைத்து மதப்பேர்வளிகளையும் போதுவாக காட்டினாலும். கிருத்துவத்தை கொஞ்சம் ராவாக விமர்சித்திருக்கிறார். நோயினால் வாடும் மக்களை காப்பாற்ற வரும் புதிய மருத்துவர், நோயாலிகளுக்கு மருந்து தராமல் அனைவரையும் தோத்திரம் சொல்லவும், ஜெபம் செய்யவும் சொல்லி மதமாற்றுவதாக காட்சி படுத்தி, ஒரு பாடலும் வருகிறது. மக்களின் அவளத்தை பயன்படுத்தி மதமாற்றம் நடைபெற்றது என்ற கருத்தை கட்டமைக்க பாலா முயல்கிறார். உண்மையில் இந்த மக்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த டேனியெல் என்ற கிருத்துவ மருத்தவர்தான் எரியும் பனிக்காடு நாவலை எழுத்தி அம்மக்களின் துன்பத்தை வெளிபடுத்தியவர். அதுமட்டுமல்ல இம்மக்களுக்கு மருத்துவம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் உரிமையினை நிலைநாட்ட சங்கம் அமைத்துகொடுத்து போராடினார். யாருடைய கதையை எடுத்து பாலா படம் செய்திருக்கிறாரோ, அவரையே அம்மக்களுக்கு துரோகம் செய்தவராக காண்பிப்பது சரியல்ல என்பதோடு, பாலா எரியும் பனிக்காடு நாவலாசிரியர் டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை கண்டனத்துடன் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.

1350496839_paradesi-movie-latest-stills-06 மக்களின் அவளத்தை பயன்படுத்தி மதமாற்றம் நடைபெற்றது உண்மை என்றாலும், அது மட்டுமே உண்மையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தின் தென்பகுதியில் ஜாதிய ஆதிகத்திற்கு எதிராக கிருத்துவ மதமாற்றம் ஒரு சமூக புரட்சியாக நடைபெற்றது என்பதும் வரலாற்று உண்மையே. இப்பகுதிகளில் உள்ள அடித்தளமக்கள் கல்வியும், பொளாதார மேம்பாடு அடைய கிருத்துவத்திற்கு முக்கிய பங்குண்டு என்பதையும் சேர்த்தே பார்க்கவேண்டியுள்ளது.
எரியும் பனிக்காட்டினை தவிர்த்துவிட்டு பரதேசியின் கதைப்படி வதைக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு சொல்லாமல், அவர்களின் வலியை மறக்க மதபோதனை செய்து மக்களை கிருத்துவ பாதரிகள் ஏமாற்றினார்கள், அதைத்தான் பாலா காட்சி படுத்தியுள்ளார் என்று பாலாவின் சார்பாக சிலர் வாதிடலாம். அவ்வாதம் ஏற்புடையதே, ஆனால் கிருத்துவ மிஷினரிகளின் துரோகத்தை சுட்டிக்காட்டுவதில் பாலா காட்டிய வேகத்தை, படத்தின் கதைமாந்தர்களாக வரும் தலித் மக்களின் அடையாளத்தை வெளிபடுத்துவதில் பாலா வேகம் காட்டாதது ஏன்? எரியும் பனிக்காடு நாவலை படித்தால், இந்த மக்கள் ஏன் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதையும், இவர்களின் அடையாளத்தை ஏன் பாலா முன்னிலைபடுத்தவில்லை என்பதும் புரியும்.

எரியும் பனிக்காடும்- பரதேசியும்
எரியும் பனிக்காடு நாவலை படிக்கும் பொழுது மனதில் ஏற்பட்ட அழுத்தத்தை, வலியை வார்தையால் விவரிக்க இயலவில்லை. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உடம்பில் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள், நம் உடம்பில் ஊறுவது போலவே உணர்ந்தேன். அவர்கள் சிந்திய இரத்தமும், கண்ணீரும் நமதாகவே எண்ணத்தோன்றியது. பலரும் சொன்னதைபோல் தேனீர் அருந்தும் போதெல்லாம், தோட்டத்தொழிலாளரின் இரத்த வாடயை அதில் உணர்ந்தேன். நாவல்-சினிமா இரண்டிற்குமான மொழி, அரசியல் வெளி வேறு என்பதால், நாவல் காட்சிப்படுத்திய அளவிற்கு மிக நுட்பமாக ஆழமாக சினிமாவில் பதிவு செய்யமுடியாது என்பது உண்மையே. எனினும் அதை சினமா மொழியில் பதிவு செய்வதில் பாலா ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு கருவை தேர்ந்தெடுத்து படம் செய்வதே துணிச்சாலான செயல் என்று நினைக்கிறேன். கதையின் சாராம்சம் குறையாமல் கருவை வெளிப்படுத்துவதில் பாலா பாராட்டிற்கு உரியவர்தான். படத்தில் குறைபாடு என்று பல விசயங்களை சுட்டிகாட்ட முடியும். ஆனால் கதை களமும், அதை முன்வைத்த விதமும் குறைபாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. பாலாவின் முந்தைய படங்களை விமர்சித்த அளவிற்கு இதை செய்ய வேண்டாம் என்றே தோன்றுகிறது.

1350497257_paradesi-movie-posters-05நாவல்களை படமாக்குவது என்பது பல படைப்பாளிகளின் கனவாக உள்ளது, இம்முயற்சிகளில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்களே அதிகம். இவ்வரிசையில் வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் பாலாவிற்கு முதன்மையிடம் இருக்கும் என நம்புகிறேன். மறுபுறம் நாவலை படமாக்குவது என்பது நாவலின் உள்ளடக்கத்திற்கு செய்யும் துரோகம் என்று சிலர் வாதிடுவார்கள். பல நேரங்களில் இக்கருத்தை நான் வெறுத்திருக்கிறேன். பரதேசியை பார்க்கும் போதுதான் எனது கருத்து தவறு என்று புரிந்தது. படம் சொல்லாத பலவற்றை நாவல் சொல்லியுள்ளதுதான். என்னை பரதேசியை விட எரியும் பனிகாடு நாவல்தான் அதிகம் ஈர்த்துள்ளது என்பது உண்மையே. சினிமாவின் அழகியல் வேறு, நாவலின் அழகியல் வேறு. இருப்பினும் நாவல் வாசகர்களை விட சினிமாவின் பார்வையாளர்கள் அதிகம், சினமாவின் மூலம் இக்கதை சமூகத்தின் அனைத்து மூலைகளுக்கும் செல்லும் வாயப்புள்ளது என்பதால், இது போன்ற நாவல்கள் படமாவது தேவையே. மேலும் படம்பார்த்த தாக்கத்தில் மீண்டும் ஒருமுறை எரியும் பனிக்காட்டை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பாலா ஏற்படுத்திவிட்டார். அவ்வகையில் இம்முயற்சி வெற்றியே…!!!

Comments
  1. //முந்திய படங்களில் ஜெயமோகனோடு இணைந்த பாலா, இந்துத்துவ பூவோடு சேர்ந்த நாராக மணந்தார். அது நம்மில் பலருக்கு குமட்டலையும், அருவருப்பை ஏற்படுத்தியது. இப்போது கூட்டணி மாறியது நல்லது என்றாலும், இன்னும் இந்துத்துவ வாசம் பாலாவிடம் குறையவில்லை என்பதை இப்படத்திலும் சில காட்சிகள் உணர்த்துகின்றது. //

    அப்படிப்போடு. சூப்பர், சூப்பர் தோழர். என்னடா ரொம்பநேரமா ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கேனு நினைச்சேன். செங்கண் பார்வைக்கு நல்லதெல்லாம் காவியாகப்படும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து, என் கருத்துக்கு பலம் சேர்க்கிறீர்கள். நன்றி. க க க போ.

    //அதுமட்டுமல்ல இம்மக்களுக்கு மருத்துவம் பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் உரிமையினை நிலைநாட்ட சங்கம் அமைத்துகொடுத்து போராடினார். யாருடைய கதையை எடுத்து பாலா படம் செய்திருக்கிறாரோ, அவரையே அம்மக்களுக்கு துரோகம் செய்தவராக காண்பிப்பது சரியல்ல என்பதோடு, பாலா எரியும் பனிக்காடு நாவலாசிரியர் டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை கண்டனத்துடன் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.//

    நல்ல வக்காலத்து தோழர். இதையே சற்றுத் திரும்பி யோசித்துப் பாருங்கள். “A Wednesday” படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கமல், “உன்னைப் போல் ஒருவனில்” எப்படித் திரித்து இயக்கினார்? உங்கள் சமதர்மம் எனக்குச் சமமாகவேப் படவில்லை. ஒட்டகத்தின் முதுகில் சமவெளியை எதிர்பார்க்கும் செங்கண் மாந்தர்களால் “சமதர்மம்” என்ற சொல், ஓட்டுக்காகவம், தாங்கள் நல்லவர்கள் என்று பசப்பிக் கொள்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்கிறது.

    //தமிழகத்தின் தென்பகுதியில் ஜாதிய ஆதிகத்திற்கு எதிராக கிருத்துவ மதமாற்றம் ஒரு சமூக புரட்சியாக நடைபெற்றது என்பதும் வரலாற்று உண்மையே.//

    அட்ரா, அட்ரா சூப்பர் சூப்பர். எங்க வந்து நிக்குது பாத்தீங்களா உங்க புரட்சி. சேலைய மாத்துர புரட்சி மாதிரியா மதமாற்றப் புரட்சி.

    //தலித் மக்களின் அடையாளத்தை வெளிபடுத்துவதில் பாலா வேகம் காட்டாதது ஏன்?//

    இதுவரை அவர் எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே தலித் மக்களின் அடையாளத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. செங்கண் அல்லவா உங்களுக்கு அப்படித்தானே தெரியும்.

    //படத்தில் குறைபாடு என்று பல விசயங்களை சுட்டிகாட்ட முடியும். ஆனால் கதை களமும், அதை முன்வைத்த விதமும் குறைபாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. பாலாவின் முந்தைய படங்களை விமர்சித்த அளவிற்கு இதை செய்ய வேண்டாம் என்றே தோன்றுகிறது. //

    சூ… அப்பா.. இப்பவே கண்ணக் கட்டுதே.

    //மேலும் படம்பார்த்த தாக்கத்தில் மீண்டும் ஒருமுறை எரியும் பனிக்காட்டை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பாலா ஏற்படுத்திவிட்டார். அவ்வகையில் இம்முயற்சி வெற்றியே…!!!//

    அப்ப பாலா டேனியலுக்கு துரோகம் செய்தவிட்டாரா? இல்லையா? தோழர். அவர் நல்லவரா? கெட்டவரா?

    பரவாயில்லை உங்கள் செங்கண்ணுக்கு, ஒரு சில மட்டுமே காவியாகத் தெரிந்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் பாலா என்று நம்புகிறேன். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள். நன்றி.

    • எனக்கு செங்கண் இருப்பதாக நீங்கள் கருதினால், அது எனக்கு மகிழ்ச்சியே….
      பாலா ரெட் டீ நாவலாசிரியர் டேனியலுக்கு செய்த துரோகத்திற்கும் கமல் வெட்நெஸ்டே படத்தை மாற்றியதோடு ஒப்பிடுவது தொடர்புடையதா என்று எனக்கு தெரியவில்லை.. இருப்பினும் கமலஹாசனின் உன்னைபோல் ஒருவனிலும் எனக்கு உடன்பாடுகிடையாது தோழா…

      கிருத்துவ மதமாற்றம் ஒரு சமூகமாற்றம் என்பதே என் ஆளமானகருத்து, சாதிய ஆதிகத்திற்கு எதிராக நடைபெற்ற புரட்சியே அது.. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களுக்கு யாராவது தென்மாவட்ட நாடார்கள் யாராவது!?!?!?! தெரிந்திருந்தால் அவரிடம் கேளுங்கள். (நீங்கள் உங்கள் தந்தையிடம் கூட கேட்டகலாம்) முந்நாள் தீண்டப்படாதவர்களான சாணார்கள் கிருத்துவத்தால் அடைந்தது என்ன வென்று…???
      விவாதத்தை தொடர்வோம்
      பதிவிட்டதற்கு நன்றி

      • தோழர், மாறாத நாடார்கள் யாரும் கீழமையடைவில்லை என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஸ்தவ மதமாற்றம் ஒரு தேவையான சமூக மாற்றம் என்பதை நான் ஏற்கவில்லை. கிறிஸ்தவத்தை ஏற்றால் முன்னேரலாம் என்பதல்லவா உங்கள் பொருள் என்றாகிவிடும்! கிறிஸ்தவத்தில் சாதிய ஆதிக்கமே இல்லை என்று நிறுவுங்கள் பார்ப்போம். அதே நீங்கள் சொல்லும் தென் மாவட்டங்களின் நிலையை நேரில் சென்று பாருங்கள். அங்கே எத்தனை திருச்சபைகள் தலித்துகளைப் புறக்கணிக்கின்றனர் என்று.

        அதென்ன யாராவது என்று அத்தனை கேள்விக்குறி. கேள்விக்குறிகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.

        கிறிஸ்தவ மதமும் கம்யூனிச மதமும் புதிதாக இந்தியர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுத்து மேலெழுப்பி விட முடியாது. மாறாக இந்தியர்களே அவர்களை விட எல்லா மட்டத்திலும் உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். செவ்விழிப்பார்வையில் அது தெரியாது.

        நாடார்கள் எப்படி சமுதாயத்தில் மேலெழுந்தார்கள் என்பதற்கு வரலாற்றுப் புரிதலோடு ஜெய மோகன் வணங்கான் என்ற கதையில் விளக்குகிறார். அந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன். இதைக்கூட ஒரு படமாக எடுக்கலாம். சாணார்களைப் பற்றிய உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம். (மாறாது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்) அந்தக் கதைக்கான லிங்க் இதோ http://www.jeyamohan.in/?p=12218

        குறிப்பு: பரதேசி திரைப்படத்திற்கு ஞானியின் விமர்சனத்தை விமர்சித்திருக்கும் ஜெயமோகனையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். இது தான் அதற்கான லிங்க் http://www.jeyamohan.in/?p=35407

      • • ஜி, சாணார் – நாடார் சமூக வேற்றுமை இருந்த காலகட்டத்தை பேசுகிறேன். நிலவுடமை உள்ள நாடார்கள் திருவிதாங்கூர் மன்னரிடம் “சாணார்கள் நாடார் என்ற பதத்தை பயன்படுத்த கூடாது” என்று மனுகொடுத்த காலத்தில், சாணார்களுக்க சமூக மாற்றத்தை தந்த கிருத்துவத்தை பற்றி பேசுகிறேன். இதை சமூக முன்னேற்றமாக நீங்கள் ஏற்க மறுப்பீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். இந்த வெறுப்பை பயன்படுத்திதானே ஆர்.எஸ்.எஸ் குமரி மாவட்டத்தில் அரசியல் செய்கிறது.
        • திருச்சபைகள் தலித்துகளை புறக்கணிப்பது ஒன்றும் புதிய செய்தியில்லையே, கிருத்துவம் இந்துமத வர்ணாசிரமத்திற்கு வீழ்ந்தது உங்கள் வெற்றிதானே, அதை கொண்டாடுங்கள். கண்டிக்கும் வேலை எங்களது தானே…..
        • கேள்விகுறிகளுக்கான அர்த்தம் உங்களுக்கு புரியவில்ல என்றால்??? நம்பமுடியவில்லை… உண்மையிலேயே புரியவில்லை என்றால்.. நீங்கள் இன்னம் சமுதாய அரசியலில் பாடம் கற்க்க வேண்டியது நிறைவுள்ளது…? ரஜேந்திரனிடம் இந்த கேள்வி குறிகளை காட்டுங்க.. உடனே பதில் சொல்வர்…
        • பரதேசி பற்றி ஞானியிக்கு ஜெமோ கூறிய பதிலில் பெரிதாக ஒன்றும் இல்லை.. 1) ஜெமோ தான் சினிமாவில் சாதித்து விட்டார் என்ற தலைக்கனம் தெரிகிறது. 2) மாற்றத்திற்கான சினிமா பேசும் ஞானியை தனிநபர் வசைபாடலின் மூலம் ஜெமோ காலிபண்ணிடாரு (எனக்கும் ஞானியை பற்றி பெரிய விருப்பமெல்லாம் இல்லை). 3) தமிழ் சினிமாவின் இன்றைய இந்துமதவயப்பட்ட நிலப்பிரபுத்துவ நிலைபாடு ஜெமோவுக்கு பிடித்தம்.. ஆனால்……..

      • சரி ஜெயமோகனின் வணங்கான் கதை லிங்க் கொடுத்திருந்தேனே, அந்தக் கதையைப் படித்தீர்களா தோழர். சாணார் – நாடார் பேதத்தைப் அப்புறம் பார்ப்போம்.

        நாடார்கள் கிறிஸ்தவத்திற்கு மாறியதால்தான் சமூகத்தில் முன்னேறி, தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பாக உயர்ந்தார்கள் என்பதை நம்புகிறீர்களா? இது தான் வரலாறா?

        அப்படி கிறிஸ்தவத்திற்கு மாறி உயர்ந்த நாடார்கள், எப்படி உயர்ந்தார்கள்? சமூகத்தில் எப்படி அந்தஸ்துக்கு வந்தார்கள் என்று ஒரு வரலாற்றுப் பார்வையை உங்களால் காட்ட முடியுமா?

        நான் மேற்குறிப்பிட்ட அந்தக் கதையில் எப்படி உயர்ந்தார்கள் என்பதற்கான வரலாற்றுக் கோடு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.

        பாலா டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற செஞ்சிந்தனையை உங்கள் செவ்விழியால் பார்த்து, செவ்வார்த்தைகளால் சொல்லியிருந்தீர்களே,

        இந்த விமர்சனத்தையும் கொஞ்சம் படியுங்கள் தோழர். டேனியல் ஏன் மதமாற்றம் குறித்து தனது நாவலில் பேசவில்லை, இது துரோகமில்லையா? என்று விமர்சிக்கிறது இந்தத்தளம் http://www.tamilhindu.com/2013/03/paradesi-film-review/

  2. வணங்கான் கதையை படித்தேன், அன்றைய சாணார்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தியது சிறப்பு. ஆனால் அதில் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை முன்வைத்தாக வெல்லாம் சொல்ல முடியாது.. கதையில் வரும் வக்கீலின் காலகட்டம் மிக பிந்தையது.. ஆனால் சாணார்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் 19ஆம் நுாற்றண்டின் இறுதியிலும், 20 நூற்றாண்டின் துவக்கித்திலேயே துவங்கியது.

    தானாகவே தமிழ், ஆங்கிலம் படிக்க கற்றுக் கொண்டார் என்பதெல்லாம், நம்பமுடியவில்லை.. மேலும் அவர் படிக்க கற்றுக்கொண்டது எப்படி என்பது மறைக்கப்பட்டுள்ளது என்றே கருதகிறேன். டேனியர் மதமாற்றம் செய்ததை நாவலில் பேசாமல் விட்டதாக தாங்கள் வாதிடுவதைபோல் ஜெ வணங்கான் கதையில் வணங்கானின் தந்தை கல்வி பெற்ற ரகசியத்தை சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

    • Arasan says:

      காலகட்டம் பிந்தையதாக இருந்தாலும், அதுவரை நாடார்கள் (சாணார்கள்!) பின்தங்கியவர்களாகவே இருந்தார்கள். தென்தமிழகத்தில் ஐயா வைகுண்டரின் போதனைகளினால் ஒரு எழுச்சி ஏற்பட்டத்தைப் போல நேசமணியின் காலத்திலும் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

      அந்தக் கதைப்படி வணங்கான் மதமாற்றத்தால் சமூக உயர்வு பெறவில்லை. கல்வியாலேயே பெற்றான். அவனது தந்தைக்குக் கல்வியை யார் கொடுத்திருந்தாலென்ன. அந்த சமூகத்தின் எழுச்சிக்கு மதம் ஒரு பொருட்டாக இல்லை. கல்வியைக் கொடுத்ததால் மதம் மாறி நீங்கள் சொல்வதுபோல் புரட்சியை உண்டாக்கவேண்டியதில்லை. நான் கல்வியைத் தருகிறேன். நீ எனது மதத்துக்கு வா என்பது என்னமாதிரியான சேவை (அ) புரட்சி. கல்வியைக் கொடுத்ததற்காக ஒருவன் தன் இன அடையாளத்தை மாற்றி மதம் மாறுவதுதான் மாற்றுக்களம் விரும்பும் மாற்றுக் கலாச்சாரமோ என்னவோ தெரியவில்லை.

      மற்றபடி வணங்கானின் தந்தை தானாகப் படித்தார் என்பது ஏற்புடையாதாக இல்லைதான் என்றாலும், கிறிஸ்தவர்களால் தான் படித்தார் என்று மறைமுகமாகப் பொருள் கொள்ளலாகாது. யாரோ ஒருவரோ அல்லது பலரோ டீக்கடையில் அமர்ந்து அந்த பாத்திரத்திற்கு எழுத்தின் பொருளைக் கூறியிருக்கலாம் (இதையெல்லாம் பக்கம் பக்கமாகக் கூறிக் கொண்டிருந்தால் அந்தச் சிறுகதை நாவலாகிவிடும்) என்றும்கூட அனுமானிக்கலாமே.

      டேனியல் மறைத்ததற்கும், ஜெயமோகன் மறைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது தோழர். அந்த வித்தியாசத்தைக் காண்பதில்தான் நீங்கள் அக்கரையில் (மாற்று) இருக்கிறீர்கள். நான் இக்கரையில் (இயல்பு) இருக்கிறேன்.

      • //டேனியல் மறைத்ததற்கும், ஜெயமோகன் மறைப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது தோழர். அந்த வித்தியாசத்தைக் காண்பதில்தான் நீங்கள் அக்கரையில் (மாற்று) இருக்கிறீர்கள். நான் இக்கரையில் (இயல்பு) இருக்கிறேன்.// இக்கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s